கொழும்பில் நாளை 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.அம்பத்தலை நீர் சுத்திகரிப்பபு நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை முற்பகல் 8 மணி முதல் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான 18 மணி நேரத்திற்கு,குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய,கொழும்பு,தெஹிவளை,கல்கிசை,கோட்டை,கடுவல மாநகரசபை எல்லைக்குட்டபகுதிகளிலும்,மஹரகம,பொரலஸ்கமுக,கொல னாவை ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும்,கொட்டிகாவத்தை,முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்மலானை,சொய்சாபுரஆகிய பிரதேசங்களிலும்,இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.