இலங்கைக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது.

இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2; 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

3 ஆவது டெஸ்ட் போட்டியிலாவது இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா என இலங்கை அணி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் தினேஸ் சந்திமல் விளையாட மாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.