மத்தல விமான நிலையத்துக்கு அருகில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 
லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டைமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.