(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சயின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2020 இல் தான் பாராளுமன்ற தேர்தல்  நடத்த வேண்டும்  என்று எவருக்கும் உறுதியாக குறிப்பிட முடியாது. பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவதற்கு முன்னரே  நாட்டின்  அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தலை நடத்த தீர்மானிக்கலாம்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கும், பாராளுமன்ற தேர்தலை நடத்த திகதி நிர்ணயித்தமைக்கும் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் எவ்வகையான தீர்ப்பினை வழங்கும் என்று எவராலும் எத்தணிக்க முடியாது.  பிறப்பிக்கப்படுகின்ற தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்  ஒரு வேளை சாதகமான தீர்வு கிடைக்கப் பெறுமாயின் அடுத்த வருடம்  பாராளுமன்ற தேர்தல் சில வேளை  இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.