ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்வம் தாள மயம் அடுத்த மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கனவே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜீவ் மேனன். இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு சர்வம் தாள மயம் என்ற படமொன்றை இயக்கியிருக்கிறார். ஜீ வி பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கர்நாடக இசையையும், இசைக்கலைஞரையும் மையப்படுத்திய படம் என்பதால் ஒஸ்கர் விருதுப் பெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் அண்மையில் ரஷ்ய நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவின் போது திரையிடப்பட்டு பார்வையாளர்களால் பாராட்டைப் பெற்றது. ஆண்டின் இறுதியில் நத்தார்  திருநாள் மற்றும் ஆங்கிலபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையில் இந்த படம் வெளியாவதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்றே தெரிகிறது.