இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­காக பிர­தமர்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்சரவையில் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  மற்றும்  பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற்றது.

இதன்போது அர­சாங்­கத்தின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மற்றும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை   உள்­ளிட்ட விட­யங்களும் ஆராயப்பட்டுள்ளன.

அத்­துடன் திறை­சே­ரியின் செய­லாளர் உள்­ளிட்ட  அர­சாங்­கத்தின்  நிதித்­துறை உயர் அதி­கா­ரி­க­ளையும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்கு அழைத்து ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டி­ய­தாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   

மேலும்  விரைவில்  இடைக்­கால வரவு, செல­வுத்­திட்­டத்தை  முன்­வைப்­பது குறித்தும்   அதனை  நிறை­வேற்­றிக்­கொள்­வது தொடர்­பா­கவும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது பேசப்­பட்­டி­ருக்­கின்­றது.  இதன்­போது  இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­காக பிர­தமர்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.