காதலித்து கைவிட்ட காதலனை கொன்று, கறி சமைத்து,  பரிமாறிய தெரிவித்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். 

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண் ஒருவருக்கும், மொராக்கோ நாட்டிலிருந்து அதே பகுதிக்கு வேலைக்காக சென்றிருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஒருகட்டத்தில் கள்ளக்காதலி மீது கொண்ட காதல்  கசந்துப் போன நிலையில், நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அவளிடம் குறித்த  வாலிபர் கூறியுள்ளார்.

இதனால், இவ்வளவு காலமாக அவர் செய்துவந்த பண உதவிகள் நின்றுப் போகும் என்று ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து தாக்கிக் கொன்று பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, -கறியாக்கினார்.

அதன் பின்னர் குறித்த துக்கறியை கொண்டு பிரியாணி கறிச்சோறு சமைத்து அந்த உணவை அருகாமையில்  கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.

இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன குறித்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்ற போது. என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என ஆவேசமாக பதிலளித்தார், குறித்த பெண்

அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர பொலிஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

இதைதொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப் பல் சிக்கி இருப்பதை கண்டு. அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது.

அத்தொடு மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு விருந்தாக்கிய விபரமும் தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு . அவருக்கு மனநல பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக  வளைகுடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.