யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகிலுள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரது  சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இன்று காலை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், யாழ்.கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (வயது-33) என்பவருடையதென தெரியவந்துள்ளது.

கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த ஜோசப் ஜெபர்சன், இரவு வேளைகளில் குறித்த வீட்டில் உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றும் அவ்வாறு உறங்கிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்து காணப்பட்டதாக சக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்