(எம்.மனோசித்ரா)

வெகு விரைவில்  இடைக்கால வரவு - செலவு திட்டத்தினை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன் நாம் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும். அதனை விடுத்து நாட்டில் பிரச்சினைகளையும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடாது குழப்பங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.