கிளிநொச்சி கிராமங்களின் உள்ளக வீதிகள் 90 வீதமானவை  மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறான வீதிகளால் நாளாந்தம் பல்வேறுத் தேவைகளுக்காக பயணம் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை  எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில்  இன்றைய தினம்  கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியில் பாண் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரின் முச்சக்கர வண்டி வீதியில் மழை நீர் தேங்கி நின்ற குழியினுள்  சரிந்து விழந்துள்ளது. 

இதனால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட  பல ராத்தல் பாண்கள் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சேற்று நீரினுள்  வீழ்ந்துள்ளது. 

இந்த விபத்துக் காரணமாக அவருக்கு பல ஆயிரம் ரூபாக்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.