மாலைதீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில் லஹிரு மதுசங்க கடந்த 2015 ஆம் ஆண்டு மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். 

கடந்த 3 வருடங்களான அந்நாட்டு சிறைச்சாலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டின் அடிப்படையில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.