10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் ருமேனியாவில் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் தற்போது  குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் திருந்தாத மக்கள் பலர் சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ருமேனியாவின்  கிரையோவை சேர்ந்த நாடோடி குழுவைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.

தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அந்த குழந்தைகள் முழித்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுதது குறித்த திருமண வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் பொலிஸார் அந்த குழந்தைகளின் பெற்றோரை கைது செய்ய தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.