ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கொலை சதி தொடர்பில் கைது செய்யப்பட்ட  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் நாலக சில்வாவுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.