பூநகரியில் முன்னெடுக்கப்பட்ட  உலக மீனவர் தினம்

Published By: Digital Desk 4

21 Nov, 2018 | 02:31 PM
image

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் 'எமது எதிர்காலம் எமது கையில்' எனும் தொனிப்பொருளில் உலக மீனவர் தினம் இன்று புதன் கிழமை (21) பூநகரியில் கொண்டாடப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களை மையப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதார வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச சபைக்கு உற்பட்ட தனியார் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. 

குறித்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வடமாகாண நீரியல் வளதுறை உதவி இயக்கினர் நிருபராஜ்,யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் திருமதி.சுரேஸ் புளோரிடா மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , கிரம அலுவலகர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கடலினை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில் ஈடுபடும் குறிப்பாக அட்டைபிடித்தல், இறால் , நண்டு , கரைவலை, வீச்சு வலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு குழுக்களாக சிறப்பாக   இயங்கி வரும் ஆண் மற்றும் பெண்களும் மீனவர் குழுக்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் முதலாவது தலைமைத்துவ...

2024-06-24 20:43:11
news-image

ரணசிங்க பிரேமதாசவின் 100ஆவது பிறந்த தினம்...

2024-06-24 11:24:24
news-image

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு

2024-06-22 17:43:06
news-image

"'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன்!" -...

2024-06-24 11:35:52
news-image

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு கணினி...

2024-06-22 16:41:21
news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48