ஹெரொயின் மற்றும் கசிப்பு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் ஏறாவூர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுள் ஹெரொயின் விற்பனை செய்த  சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் கசிப்பு விற்பனை செய்த குற்றச் சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் களுவான்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

ஹெரொயின் வியாபாரிகளிடமிருந்து 1380 மில்லி கிராம் போதைப்பொருளும் கசிப்பு விற்பனையாளர்களிடமிருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 1500 மில்லி லீற்றர் கசிப்பு ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.