தற்கொலையைத் தூண்டும் நான்கு விடயங்கள்

Published By: R. Kalaichelvan

21 Nov, 2018 | 01:25 PM
image

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் பதினைந்து வயது முதல் நாற்பது வயது வரைக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், இதில் அவர்களின் அகக் காரணிகளை விட புறக்காரணிகளின் தூண்டுதல் தான் அதிகம் என்றும்  தெரிவித்திருக்கிறார்கள்.

வேலையின்மை, விவகாரத்து, காதல் தோல்வி, எதிர்பாராதது நடந்துவிடுவது போன்றவற்றால் இவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள். 

அந்த தருணங்களில் எம்மில் இருக்கும் நான்கு மரபணுகள் தூண்டப்பட்டு, அவை வேகமாக செயலாற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபடவைக்கிறது. 

இதனை கண்டறிந்துள்ள மருத்துவ நிபுணர்கள், மன அழுத்தத்தின் போது அந்த நான்கு மரபணுக்களின் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கான  நடவடிக்கை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

ஆனால் தற்கொலை என்பது மருத்துவ ரீதியாக தடுக்கப்பட கூடியவை. 

சிலருக்கு இது பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக ஏற்படுகிறது என்பார்கள். 

ஆனால் அத்தகையவர்களை கண்டறிந்து, உளவியல் சிகிச்சையை கொடுத்து, புறச்சூழலை நன்றாக அமைத்துக் கொடுத்தால் அல்லது அமைத்துக கொண்டால் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட முடியும்.

தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதித்ததுடன், எப்படி செய்து கொள்ளவேண்டும் என்ற சிந்தனை உடனடியாக தோன்றாதாம். 

அதற்கான இடைவெளியில் அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அவர்களை  ஆக்கிரமித்திருக்கும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கலாம். 

அதற்காக பிரத்யேக உளவியல் சிகிச்சையும் உண்டு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

டொக்டர் ராஜ்மோகன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29