மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து எட்டு துவிச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

29 வயதுடைய குறித்த சந்தேக நபர்  சுமார் இரண்டு மாதகாலத்தில்  ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் துவிச்சக்கர வண்டிகளை திருடிச்சென்று விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை இவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.