மஸ்கொலியா காட்மோரிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கும்  இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் தற்போது அதன் சாரதி  விடுமுறையில் சென்றால் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை அதற்கு மாறாக யாரும் பணிக்காக வருவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களும் மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பஸ்ஸானது காலை 6:30 மணியளவில் காடமோரிலிருந்து மஸ்கெலியா, நோர்வூட்  ஊடக ஹட்டன் சென்றடையும். இந்நிலையில் குறித்த பஸ்ஸானது கடந்த ஒரு வாரமாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட தொழிலுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு  முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பஸ் இடைநிறுத்தமானது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்னர் தான் இவ்வாறு இடம்பெறுகிறது.இது தொடர்பாக ஹட்டன் அரச பஸ் நிலையம் முகாமையாளரிடம் கேட்கும் போது, விடுமுறையில் சென்ற சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு தந்தி மூலம் அறிவித்துள்ளதுடன் புதிய சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு இணைந்து கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்