சீனாவில் ஒரு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளும், நான்கு நானோ செயற்கைக்கோள்களும் ஒரே ரொக்கெட் விமானத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரொக்கெட் ஆனது நேற்றுக் காலை 7:40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜீயுகுவான் செயற்கைக்கோள் மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட லொங் மார்ச்-2 டி (Long March-2 D) செயற்கைக்கோள்கள் விண்ணில் உள்ள சுற்று வட்டப் பாதையை சென்றடைந்துள்ளன. 

அத்துடன் இந்த செயற்கை கோள்கள் சீனாவின் லொங் மார்ச் வரிசையில் 292 ஆவது செயற்கைக்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.