பாமர ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்  கவர்ச்சி நடிகை ஷகீலா சுயசரிதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. இவரது சுயசரிதை தற்போது அவரது பெயரிலேயே படமாக தயாராகி வருகிறது. இதனை கன்னட இயக்குநர் இந்திரஜித் லிங்கேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷகீலாவாக பொலிவுட் நடிகை ரிச்சா சதா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதற்குள் இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகவிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் தொடர்பில் நாயகி ரிச்சா சதா தெரிவிக்கையில்,‘ இந்த படத்தின் படபிடிப்பின் போது ஷகீலாவும் கலந்து கொண்டு பல சுவராசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவரின் பங்களிப்பு திரைக்கதையிலும் இருக்கிறது. நான் சில காட்சிகளில் அவர்களுடைய உடல்மொழியையும், வசன உச்சரிப்பையும் உள்வாங்கி நடித்திருக்கிறேன்.’ என்றார்.

இந்த படத்தில் நடிகை ஷகீலா கௌரவ வேடத்தில் நடித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.