ஜீவா சதாசிவம் (சங்கமம் பொறுப்பாசிரியர் வீரகேசரி) எழுதிய சமகால அரசியல் நிலைவரங்கள்  கொண்ட அலசல் எனும் நூல் வெளியீட்டு விழா எதிவர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.மங்கள விளக்கேற்றல், ஆசிரியர் திருமதி சுபாஷினி பிரணவனின் மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் எம்.ராம் வரவேற்புரையை நிகழ்த்துவார்.

சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோஸப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், அவரது தலைமையுரையையடுத்து நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

எக்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் நூலை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்.

நூலின் ஆய்வுரையை பேராசிரயர் சபா ஜெயராசாவும் கருத்துரைகள் மல்லியப்புச்சந்தி திலகர் மற்றும் சிராஜ்  மசூர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளதுடன் நூலாசிரியரின் ஏற்புரை /நன்றியுரை இடம்பெறும். 

ஊடகவியலாளர் நிர்ஷன் இராமானுஜம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கவுள்ளதுடன் சிறப்பு பிரதிகளும் இதன்போது வழங்கப்படும்.