இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார்.

உடல் தகுதி சோதனையின்போது தோல்வியடைந்தமையின் காரணமாகவே அவர் இப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 2:0 என்று இழந்துள்ள நிலையில் நாளை மறுதினம் மூன்றாவது போட்டியை கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.