வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து திருடப்பட்ட சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தினை நேற்று திறப்பதற்காக சென்றிருந்த சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதினை அறிந்த உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக நிலையத்திலிருந்து தொலைபேசி மீள்நிரப்பு அட்டை , சிகரெட் என்பன திருடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியுமென வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.