சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம்.

ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ? என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேலும், 22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சுவைத்து புசித்தள்ளார்.