ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காபுலின் உரனஸ் அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மதஅறிஞர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலிலேயே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் இடம்பெற்றவேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.