கண்டி-பதியபெலல்ல பிரதான பாதையில் இரு பஸ்வண்டிகள் ஒரு பாலத்தின் மேல் வைத்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்  இரு பஸ் வண்டிகளும் பலத்த சேத்திற்கு உள்ளான போதும் இரு பஸ்  வண்டிகளிலும் இருந்த 72 பயணிகளும் காயமின்றி தப்பினர்.

கண்டியிருந்து பதியபெலல்ல நோக்கிச் சென்ற பஸ் வண்டியும், பதியபெலல்ல பதியபெலல்லயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த  பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

குறித்த விபத்துச் சம்பவம் ரிகிலகஸ்கட மாஓயா எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது கண்டியிலிருந்து சென்ற பஸ் வண்டியில் 42 பயணிகளும் மற்ற பஸ் வண்யில் 30 பேரும் இருந்துள்ளனர். இ.போ.ச. பஸ் ஒன்றுடன் ஏற்பட்ட போட்டியால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகக் குறித்த பஸ்களில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.