கண்டி மகியங்கனை பிரதான வீதியில் இன்று காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் ஹசலக்க பிரதேசத்தில் லொரி ஒன்றுடன் ட்ரெக் வண்டி ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 இதில் லொரியின் சாரதி உட்பட மேலும் நால்வருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடாபாக ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.