(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு கூட முகங்கொடுக்க முடியாத நிலையுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்றால் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு ஏற்ப சட்ட ரீதியாகவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இவர்கள் அதனை எதிர்த்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் முன்னெடுப்புகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.