இன்றைய நிலையில்  விழித்திரை வளர்ச்சியடையாத நிலை அல்லது விழித்திரை முதிராத நிலை எனப்படும் Retinopathy Of Prematurity என்ற பாதிப்பிற்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. 

உலக சுகாதார நிறுவனமும் இது குறித்து போதிய அளவிற்கு விழிப்புணர்வை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த பாதிப்பால் தெற்காசியாவில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த பாதிப்பை கண்டறிவதில் உள்ள குறைபாடே இத்தகைய பாதிப்பு அதிகரித்து பார்வையிழப்பிற்கு காரணமாகிறது. குழந்தை பிறந்து இரண்டு வாரத்திற்குள் இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் தெரியும் என்றும், அதனை உரிய சமயத்தில் வைத்தியர்களிடம் காண்பித்து உறுதிப் படுத்திக் கொண்டால், அதற்குரிய ஒக்சிஜன் தெரபியை மேற்கொண்டு பார்வையிழப்பை தடுத்து, பார்வையை மீட்கலாம். சில குழந்தைகளுக்கு பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து இதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டு பார்வையை மீட்டெடுக்கிறார்கள்.

இத்தகைய ஏற்படுவதற்கு Chronic Hypoxia எனப்படும் போதிய அளவிற்கு ஓக்ஸிஜன் இல்லாத அல்லது கிடைக்காத குறைபாடே காரணம்.  இரண்டு கிலோ எடைக்கு குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், குறைமாத குழந்தைகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம். இன்னும் சில குழந்தைகளுக்கு ஓக்ஸிஜன் தேவைக்கு அதிகமாக இருப்பது, அனிமீயா, இதயத்துடிப்பில் சமச்சீரின்மை, மூளையில் ஏற்படும் இரத்த கசிவு போன்ற பல காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

டொக்டர் அமர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.