இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா அருகே உள்ள இராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆயுதக் களஞ்சியசாலையில் இன்று காலை வெடிமருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணி நடந்து வந்தது.
இதன்போது ஒப்பந்த தொழிலாளர்கள் 15 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கி வைத்தபோது, ஒரு பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெட்டிகளை இறக்கி வைக்கும் பணியை செய்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதன்போது தீயணைப்பு வீரர்களும், பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மேலும் படுகாயமடைந்த 10 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த ஆயுதக் களஞ்சியசாலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடததக்கது.
பலத்த காயமடைந்த 6 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM