காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் ரயிலுடன், கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் ரயில் கடவையில் இன்று மதியம் குறித்த விபத்து நடந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காரில் பயணித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.