அவுஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் டேவிட்வோர்னர் கமரரோன் பான்கிராவ்டிற்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மறுத்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மூன்று வீரர்களிற்கும் எதிரான தடைகளை உடனடியாக நீக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஆராய்ந்த பின்னரே அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனது முடிவை அறிவித்துள்ளது.

மூன்று வீரர்களிற்கும் இடையிலான தடை நீதியானது என தீர்மானித்துள்ள அதிகாரிகள் தடையை நீக்கவோ குறைக்கவோ மறுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் ஆவணத்தை  அவதானமாக பரிசீலித்த பின்னர் மூன்று வீரர்களிற்கும் எதிரான தடைகளில் மாற்றங்களை மேற்கொள்வது பொருத்தமற்ற து என்ற முடிவிற்கு வந்துள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்