நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ் நிலையத்திற்குச்  சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பலர் புதிதாக கடமைக்காக முகாமையாளரின் அதிகாரத்தின் கீழ்  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ஹட்டன் பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்ட பல சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அங்குப் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் 90 பஸ்கள் சேவையில் இருந்தமையால் கடந்த மாதம்  20 இலட்சம் ரூபாய் ஆதாயம் கிடைத்தது.

ஆனால் தற்போது 10 பஸ்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாமையால் பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப் பஸ்களில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் சமூகம் தராமையால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான நிலை தொடருமானால் மேலும் சில சேவைகள் இடைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஆகவே பணிக்கு சமூகமளிக்காமல் இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு உடன் பணிக்கு திரும்புமாறு தந்தி மூலம் அறிவித்திருப்பதாக முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.