ஐயப்ப பக்­தர்கள் 80 பேரை சப­ரி­ம­லையில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவில் பொலிஸார் கைது செய்து அங்­கி­ருந்து வெளி யேற்றியுள்­ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப்பெண்களையும் அனு­ம­திக்­கலாம் என்ற உச்­ச ­நீதிமன்றத்தின்  உத்­த­ர­விற்கு எதி­ராக போராட்டம்  நடத்­தப்­பட்டு வரு­வதால் சப­ரி­மலை ஐயப்பன் கோயில் சந்நி­தானம், பம்பை, நிலக்கல் உள்­ளிட்ட பகு­தி­களில் 144 தடை உத்தரவு  போடப்பட்டுள்­ளது. இந்­நி­லையில் 18ஆம் படிக்கு அருகே நடை­பந்தல் பகு­தியில் பக்தர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தங்க முயன்­றுள்­ளனர். 

ஆனால், பொலிஸார் அவர்­களை வெளி­யே­றும்­படி அறிவுறுத்தினர்.

பொலி­ஸாரின் இந்தக் கட்­டுப்­பா­டு­களை எதிர்த்து அவர்கள் அங்­கேயே அமர்ந்து போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

 இதனால் பக்­தர்கள் அனை­வ­ரையும் பொலிஸார்  கைது செய்து, வெளி­யேற்­றினர். 

இது குறித்து மலப்­புரம் எஸ்.பி. சதீஷ்­குமார் கூறு­கையில், பொலிஸார்  பக்­தர்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். சந்நி­தானம் பகு­தியில் 144 தடை அமுலில் உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்க முற்­பட்­டனர். 

இதனால் வேறு வழி­யின்றி அவர்­களைக் கைது செய்தோம். ஹரி­வ­ரா­சனம் பாடப்­பட்ட பிறகு அங்­கி­ருந்து கலைந்து செல்­லும்­படி கூறினோம்.ஆனால், அவர்கள் மறுத்து விட்­டனர். பக்­தர்கள் அவர்கள் விருப்பம் போல் வழி­பாடு நடத்தி விட்டுச் செல்­லலாம்.அதே சமயம் விதி­களை மீறக் கூடாது. வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவே 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.