முல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம் ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட உயிலங்குளம், தென்னியன்குளம், கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், போன்ற விவசாயக் கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படுகின்ற  துணுக்காயிலிருந்து அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்திக்கு வரைக்குமான பிரதான வீதியாகக் காணப்படுகின்றது.

இவ் வீதியில் கோட்டைகட்டியகுளத்தின் வான்பகுதியின் 100 மீற்றர் வரையான இவ்வீதியில் காணப்படுகின்றது.

கோட்டை‍ கட்டியகுளம் நீர்நிரம்பி வான்பாய ஆரம்பிக்கும் போது, வீதியின் ஊடாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுவதுடன், வீதி துண்டிக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக போக்குவரத்துக்களும் தடைப்படுகின்றன.

வவுனிக்குளம் நீரப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள இக்குளத்தின் வான்பகுதிக்கு வவுனிக்குளம் வான்பகதிக்கு அமைக்கப்பட்டது போன்று மேம்பாலம் ஒன்றினை அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.