யாழ்ப்­பா­ணம், அல்­லைப்­பிட்­டி­யில் நேற்­று­ முன் தி­னம் இரவு கழுத்து அறுக்­கப்­பட்டு வீதி­யில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த இளை­ஞரை வீதி­யில் சென்­ற­வர்­க­ள் மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் அனுமதித்துள்ளனர்.

அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வாடி வீட்­டுக்கு அண்­மை­யில் குறித்த இளை­ஞன் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வீதி­யோ­ரம் வீழ்ந்து கிடந்­துள்­ளார். அதன் போது அந்த வீதி­யில் சென்ற முச்­சக்­கர வண்­டிச் சாரதி அதை அவ­தா­னித்­து. வீதி­யில் வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டிச் சார­தி­யும் இணைந்து அவ­சர நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்கு அறி­வித்­துள்­ள­னர்.

.இதனையடுத்து சம்­பவ இடத்­துக்கு சென்ற நோயா­ளர் காவு வண்டி மூலம் இளை­ஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 சம்­பவ இடத்­தில் ஒரு சோடி செருப்­புக்­களும் , சைக்கிள் என்­பன கிடந்­துள்­ளன.

இந்நிலையில் குறித்த  சம்­ப­வம் தொடர்­பாக ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர். சம்­ப­வத்­துக்­கான கார­ணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.