பாராளுமன்றத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தன்னை கத்தி முனையில் அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

தண்டனை சட்டக் கோவையின் 486 ஆவது அத்தியாயத்தின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது