கண்டி, போகம்பர பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். 

தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்து கண்டி வைத்தியசாலைக்கு நோயாளர்களை அழைத்துச் சென்ற வண்டியே இவ்வாறு நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு நோயாளர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்கள் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.