அட்டன் நகர பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் பொது மலசலகூடத்தில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டன் டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில் நேரத்துக்கு நேரம் கட்டணம் வேறுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் பலர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்களின் பின்புறம் சென்று சிறுநீர் கழிப்பதாகவும் அதனால் பஸ் தரிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுவதாக இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் முதியோர் பெரும் அசௌகரியத்தை முகம் கொடுக்க நேரிடுகிறது.

இது விடயமாக பஸ் சாரதிகளிடம் கேட்டும் போது, 

அட்டன் டிக்கோயா நகர சபை முன்வந்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் நலன் கருதி பாவனைக்கு சிறுநீர் கழிக்க 5 ரூபாவும் கழிவறையை பயன்படுத்த 20 ரூபாவும் அறவிடுமாறு உத்தரவு பிறப்பிப்பதுடன் அங்கு மக்களுக்கு தெரியும் வகையில் பதாகை ஒன்றை காட்சி படுத்துமாறும் ஆண் பகுதிகளுக்கு ஆண்களையும் பெண்கள் பகுதிகளுக்கு பெண்களையும் நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர் என்றார்.