எதிர்வரும்  21 ஆம் திகதி  நடைபெறவிருக்கும்  உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மாவட்டம் பூராகவும் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நீல பசுமை பொருளாதார இலக்கினுள் மறைத்து மேற்கொள்ளப்படும் வள சுரண்டலை நிறுத்துக மற்றும் மக்களை மையப்படுத்தி மீனவ விவசாய மற்றும் காணி தொடர்பான தேசிய கொள்கைகள் ஊடக  உணவு தன்னாதிக்கத்தை உறுதி படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டிகள் ஓட்டப்படுள்ளது. 

22 வது உலக மீனவத்தினத்தை பொலநறுவை நன்னீர் மீனவ அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்  ஏற்படு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது