ஈ.டி.ஐ. பணிப்பாளர் சபையின் உறுப்பினர் சிலரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி குறித்த ஈ.டி.ஐ. பணிப்பாளர் சபையின் ஜீவக எதிரிசிங்க , நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ.நிதி நிறுவத்தின் வைப்பு பணத்தை மீள செலுத்தாமைக்கு எதிராக நீர்க்கொழும்பு கிளையில் வைப்புக்களை மேற்கொண்ட ஈ.டி.ஐ. வைப்பாளர்களை காக்கும் சுயாதீன சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயந்த கடந்த 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த பணிப்பாளர் சபைக்கு மேற்படி அழைப்பாணை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.