ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த  ஆர்ப்பாட்டத்தின்  மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலைசெய்யுமாறு கோரியே பௌத்த பிக்குகள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.