ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை விழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மாத்திரம் பங்கேற்றுள்ள ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி கடந்த 11 ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது.

இந் நிலையில் இதன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டனர் சுவரேவ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை வீழ்த்தி செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.