எம்மில் சிலருக்கு கண்ணில் திடிரென்று பார்வை குறையும் அல்லது பார்வையில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மங்கலாக தெரியலாம் அல்லது கலங்கலாகத் தெரியலாம். 

சிலர் இதன் போது தங்களின் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு மீண்டும் காட்சியை காண முயல்வர். சிலர் இதற்காக வைத்தியர்களை சந்திப்பார்கள்.

இதற்கு Central retinal  Vein Occlusion என பெயர். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் கண்ணில் ஏற்படும் பக்கவாதம். எம்முடைய உடலில் இரத்தத்தை எடுத்துச செல்லும் பணியை தமனிகளும், நரம்புகளும் உள்ளன. 

இவை எம்முடைய கண்களிலும் உள்ளன. இத்தகைய நரம்புகள் கண்களின் விழித்திரையிலும் இருன்கின்றன. இத்தகைய நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளுக்குத்தான் இந்த பெயர். இது போன்ற தருணங்களில் எம்முடைய கண்களில் புதிய இரத்த குழாய்கள் உண்டாகும். இந்த இரத்த குழாய்கள் இரத்தத்தை கசியும் தன்மைக் கொண்டதால் பார்வை பாதிக்கப்படுகிறது. அத்துடன் விழித்திரையில் இருக்கும் மேக்குலா என்ற பகுதியும் பாதிக்கப்படும். சிலருக்கு இந்த பகுதியில் வீக்கமும் ஏற்படும்.

வைத்தியர்கள் புதிய இரத்த குழாய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை அளித்து இந்த பாதிப்பைக் குணப்படுத்துகிறார்கள். சிலருக்கு கண்களில் லேசர் சிகிச்சை செய்து குணப்படுத்துவார்கள். அத்துடன் எம்முடைய சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் இந்த பிரச்சனை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

டொக்டர் பிரசாந்த்

தொகுப்பு அனுஷா