பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பின் அப்படத்தின் நாயகன் பிரபாஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் சாஹோ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று சாஹோ உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கும் இந்த ‘சாஹோ’படத்தில் பிரபாசுடன் நடிகர் அருண் விஜய், ‘கத்தி’ பட வில்லன் நீல் நிதின் முகேஷ், பொலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், மலையாள நடிகர் லால், பொலிவுட் நடிகர் ஜேக்கி ஷெராப், மந்த்ரா பேடிஉள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்த படத்தில் ஸ்பைடர் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கவர்ச்சி நடிகை எவ்லின் சர்மா ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

சங்கர் இஷான் லாய் இசையமைக்கும் இந்த படத்திற்கு, மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அறிவியல் சார்ந்த புனைக்கதையான இந்த படத்தை சுஜீத் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பட்ஜட் இந்திய மதிப்பில் 300 கோடி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.