முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது  அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொறியையும் கைப்பற்றியதுடன் இருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராவில்லு பிரதேசத்தில் கெண்டர் லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்செல்லப்பட்ட 25 வேப்ப மரக்குற்றிகளுடன்ஒருவரையும், முந்தல் பரலங்கட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 3 கியுப் மணல்ஏற்றிச்சென்ற டிப்பர்லொறியுடன்ஒருவரையுமே இவ்வாறுகைதுசெய்துள்ளதாகபொலிஸார்தெரிவித்தனர். 

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சன்ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு மேலதிகவிசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.