பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் இன்று ஊடகவியலாளர்களைத் தவிர ஏனையோர் குறித்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.