ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய வான் தாக்குதல் காரணமாக உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்யாப் மாகாணத்தினை இலக்கு வைத்தே ஆப்கானிஸ்தான் படைகள் மேற்படி குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின. 

இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந் நிலையில் இத் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என ஆப்கானிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்துள்ளார்.