பாராளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் கலரிகள் இன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகள் அனைத்தும் இடம்பெறும் போது, பார்வையாளர்கள் கலரியில் பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் அமர்ந்திருந்து பாராளுமன்ற நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பார்வையாளர் கலரியில் ஊடகவியலாளர் மாத்திரமே அனுமதிக்கப்படுவரெனவும் கடந்த அமர்வின் போது பாராளுமன்ற கலரியில் இருந்த சிலர் செயற்பட்ட விதத்தினாலேயே பார்வையாளர் கலரியில் பொதுமக்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.