அவசர திருத்த வேலைகள் காரணமாற இன்று (19) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தலவாக்கலை - லிந்துலை நகரசபை நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான மின்சார விநியோகம் தடைபடுமென இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் குறித்த காலப் பகுதிக்குள் மின் பாவணையாளர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாற்று வழி முறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்வதுடன் மின் விநியோக தடை காரணமாக ஏற்படக்கூடிய  அசெளகரியங்களுக்கு இலங்கை மின்சார சபை தனது வருத்ததையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் இம் மின் தடை தொடர்பில் பாலணையாளர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு தன்னியக்க குருஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளதாகவும் இ. மி.ச. தெரிவித்தது.